Saturday, October 20, 2012

தமிழர்-ஒரு வரலாற்று மீள்பார்வை


தமிழர்-ஒரு வரலாற்று மீள்பார்வை

கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.


கி.மு. 75000
கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000
தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000
தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000
ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527
முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100
பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன்நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000
கடைசி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087
கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000
கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000
உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000
சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.


கி.மு - 3200
சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113
அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102
சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

 கி.மு - 3100 - 3000
ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
  
கி.மு - 2387
இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000
காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915
தமிழ்நாடு-திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900
வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500
முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
  
கி. மு. 1000
உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600
வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
  
கி. மு. 850
இப்போதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.)

கி. மு. 750
பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.
  
கி. மு. 600
கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.
                                               
 கி. மு. 500
கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன்.

கி. மு. 478
இளவரசன் விஜயன் 700 துணையாளர்களுடன் இலங்கையில் செல்லல்

கி. மு. 326
அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.
  
கி. மு. 300
 கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.
  
கி.மு. 270-245
சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.
  
கி.மு. 200
 முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.
  
கி.மு. 31
உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.
  
கி.பி. 10
உலக மக்கட்தொகை 170 மில்லியன்.
  
கி.பி.200
இக்கால கம்போடியாவிலும், மலேசியாவிலும் தமிழ் அரசு ஆட்சி புரிந்தது

கி.பி.900
இந்தோனேசிய பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.

கி.பி.2012
உளறுவாயன் வலைப்பதிவை ஆரம்பித்தல்


Friday, October 19, 2012

தமிழர் வரலாறு


தமிழர் வரலாறு

தமிழர் தோற்றம் பற்றி இரு கருதுகோள்கள் உண்டு. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று.

தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டுடளவில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன.பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

இந்தியா-தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்து புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகின்றன. அப் புதைபொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும்.

செம்மொழி


செம்மொழி



'செம்மொழி' (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்.

உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர்.

செம்மொழித் தகுதி

ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும் செம்மொழிக்கான தகுதிகளாக  பதினோரு விதிகள் இருக்கின்றன.

  1. தொன்மை
  2. தனித்தன்மை 
  3. பொதுமைப் பண்பு 
  4. நடுவு நிலைமை
  5. தாய்மைப் பண்பு 
  6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு 
  7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை
  8. இலக்கிய வளம் 
  9. உயர் சிந்தனை 
  10. கலை இலக்கியத் தனித்தன்மை 
  11. மொழிக் கோட்பாடு

                    உலகச் செம்மொழிகள்

                    இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8ஆக இருக்கின்றன.
                    1. தமிழ் மொழி
                    2. கிரேக்க மொழி
                    3. சமஸ்கிருதம்
                    4. இலத்தீன்
                    5. பாரசீக மொழி
                    6. அரபு மொழி
                    7. எபிரேயம்
                    8. சீன மொழி



                    தமிழர் அளவீடுகள்


                    நிறுத்தல் அளவுகள்

                    4 நெல் எடை - 1 குன்றிமணி
                    2 குன்றிமணி - 1 மஞ்சாடி
                    2 மஞ்சாடி - 1 பணவெடை
                    5 பணவெடை - 1 கழஞ்சு
                    8 பணவெடை - 1 வராகனெடை
                    10 வராகனெடை - 1 பலம்
                    40 பலம் - 1 வீசை
                    6 வீசை - 1 தூலாம்
                    8 வீசை - 1 மணங்கு
                    20 மணங்கு - 1 பாரம்

                    நீள அளவுகள்

                    10 கோன் - 1 நுண்ணணு
                    10 நுண்ணணு - 1 அணு
                    8 அணு - 1 கதிர்த்துகள்
                    8 கதிர்த்துகள் - 1 துசும்பு
                    8 துசும்பு - 1 மயிர்நுணி
                    8 மயிர்நுணி - 1 நுண்மணல்
                    8 நுண்மணல் - 1 சிறுகடுகு
                    8 சிறுகடுகு - 1 எள்
                    8 எள் - 1 நெல்
                    8 நெல் - 1 விரல்
                    12 விரல் - 1 சாண்
                    2 சாண் - 1 முழம்
                    4 முழம் - 1 பாகம்
                    6000 பாகம் - 1 காதம்
                    4 காதம் - 1 யோசனை

                    தமிழ் பின்ன அளவுகள்


                    தமிழ் பின்ன அளவுகள்

                    1 - ஒன்று
                    3/4 - முக்கால்
                    1/2 - அரை
                    1/4 - கால்
                    1/5 - நாலுமா
                    3/16 - மூன்று வீசம்
                    3/20 - மூன்றுமா
                    1/8 - அரைக்கால்
                    1/10 - இருமா
                    1/16 - மாகாணி
                    1/20 - ஒருமா
                    3/64 - முக்கால்வீசம்
                    3/80 - முக்காணி
                    1/32 - அரைவீசம்
                    1/40 - அரைமா
                    1/64 - கால் வீசம்
                    1/80 - காணி
                    3/320 - அரைக்காணி முந்திரி
                    1/160 - அரைக்காணி
                    1/320 - முந்திரி
                    1/102400 - கீழ்முந்திரி
                    1/1075200- இம்மி
                    1/23654400 - மும்மி
                    1/165580800 - அணு
                    1/1490227200 - குணம்
                    1/7451136000 - பந்தம்
                    1/44706816000 - பாகம்
                    1/312947712000 - விந்தம்
                    1/5320111104000 - நாகவிந்தம்
                    1/74481555456000 - சிந்தை
                    1/489631109120000 - கதிர்முனை
                    1/9585244364800000 - குரல்வளைப்படி
                    1/57511466188800000 0 - வெள்ளம்
                    1/57511466188800000 000 - நுண்மணல்
                    1/23238245302272000 00000 - தேர்த் துகள்.

                    தமிழ் எண்கள்

                    தமிழ் எண்கள்
                    எண்
                    தமிழ்ப்பெயர்
                    பொதுப்பெயர்
                    1
                    ஒன்று
                    One
                    2
                    இரண்டு
                    Two
                    3
                    மூன்று
                    Three
                    4
                    நான்கு
                    Four
                    5
                    ஐந்து
                    Five
                    6
                    ஆறு
                    Six
                    7
                    ஏழு
                    Seven
                    8
                    எட்டு
                    Eight
                    9
                    ஒன்பது
                    Nine
                    10
                    பத்து
                    Ten
                    100
                    நூறு
                    Hundred
                    1000
                    ஆயிரம்
                    Thousand
                    104
                    பத்தாயிரம்
                    Ten thousand
                    105
                    நூறாயிரம்
                    Hundred thousand
                    106
                    பத்துநூறாயிரம்
                    Million
                    107
                    கோடி
                    Ten million
                    108
                    அற்புதம்
                    Hundred million
                    109
                    நிகற்புதம்
                    Billion
                    1010
                    கும்பம்
                    Ten billion
                    1011
                    கணம்
                    Hundred billion
                    1012
                    கற்பம்
                    Trillion
                    1013
                    நிகற்பம்
                    Ten trillion
                    1014
                    பதுமம்
                    Hundred trillion
                    1015
                    சங்கம்
                    Quadrillion
                    1016
                    வெள்ளம்
                    Ten quadrillion
                    1017
                    ஆம்பல்
                    Hundred quadrillion
                    1018
                    மத்தியம்
                    Quintillion
                    1019
                    பரார்த்தம்
                    Ten Quintillion
                    1020
                    பூரியம்
                    Hundred Quintillion