Thursday, October 18, 2012

பூமி உருண்டை-பேஸ்புக் முதல் ப்ளோக் வரை





ஓய்வாக இருக்கும்போது வலைப்பதிவில் எழுதுவற்கு பலவிடயங்கள் மனதில் தோன்றும்.ஆனால் நோட்பாட்டில் டைப் பண்ண ஆரம்பிக்கும்போது எல்லாமே மறைந்து விடுகின்றன.அதனால் மனத்தில் தோன்றும் எல்லாவற்றையும் தானாகவே டைப் பண்ணக்கூடிய கருவி ஒன்றை கண்டுபிடிக்கலாம் என்று நினைக்கின்றேன்.(ஹய்யோ நான் உளறல)  


பாடசாலையில் படிக்கும் போது (நம்புங்கோ...) கட்டுரைபோட்டிகளில் பக்கம், பக்கமா எழுதி தள்ளுவோம்.அப்போ எங்களுக்கு சுருக்கம் என்றொரு பாடம் இருந்தது.பந்தி பந்தியா இருக்குறதை நாங்க சுருக்கி வசனங்களாக மாற்ற வேண்டும்.அதாவது 100 வார்த்தைகள் உடைய பந்தியை 30 சொற்கள் கொண்டதாக மாற்ற வேண்டும்.அதோடு அதன் அர்த்தமும் மாறக்கூடாது.சுருக்கம் எழுத நான் எவ்ளோ கஷ்டபட்டிருப்பேன் என்று இப்போ நினைத்தாலும் மனசு கஷ்டமாயிருக்கும்.

அப்டி இருந்த எனக்கு பேஸ்புக்,ட்விட்டர் போன்றவை வந்தது என் சுருக்கம் எழுதும் கஷ்டத்தை சுலபமாக்கியது.அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சுருக்கமாக நான் சொல்ல வேண்டியதை சமூக வலைத்தளங்களில் போஸ்ட் பண்ண ஆரம்பித்தேன்.

ஆனால் விதி யாரை விட்டது? நானும் கடைசியில் வலைப்பதிவு பக்கம் வந்து சேர்ந்தேன்.ப்ளோக்’கில் ரெண்டுவரியில் பதிவு போட்டால் எப்டியிருக்கும்? ஒருக்கா நீங்களே அதை மனசில சொல்லுங்கோ.(ஓகே சொல்லியாச்சா..?)

பூமி உருண்டை என்பது போல இப்போ மறுபடியும் பக்கம் பக்கமா எழுத ஆரம்பித்துவிட்டேன்.(அப்பாடி தலைப்பை சொல்லியாச்சு.)ஸோ இனி நீங்க மறுபடியும் என் வலைப்பதிவில் பந்தி,பந்தியா பதிவுகளை எதிர்பாக்கலாம்.
   
        

No comments:

Post a Comment