பேஸ்புக்கும்
பேக்ஐடிகளும்
பேஸ்புக் என்பது
இப்போது பலரின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது.சொல்லபோனால்
இன்ரநெட்கனக்சனுடன் லப்டொப் கிடைத்துவிட்டால் இப்போ உலகையே மறந்து அதனுள் மூழ்கிவிடுகின்றார்கள்.சாதரணமாக
சொந்தமாக ஐடி ஒன்றை உருவாக்கி பேஸ்புக்கில் வலம்வருவதால் பிரச்சனை ஏதும் இல்லை.ஆனால்
எப்போ பேக்ஐடி என்ற ஒரு சொல் வந்ததோ அப்பவே எல்லா வில்லங்கமும் ஆரம்பமாகிவிட்டது.
எந்த காரணத்தால்
பேக்ஐடி உருவானகின்றது என்பதனை முதலில் பார்ப்போம்.
- தான் சொல்லவிரும்பியதை துணிந்து மற்றவர்களுக்கு சொல்வதற்கு இதனை பயன்படுத்துகின்றனர்.
- தமது தனிப்பட்ட பேஜ்,குரூப்’களுக்கு அதிகளவிலான உறுப்பினர்களை இணைப்பதற்கு இதனை பயன்படுத்துகின்றனர்.
- நண்பர்கள்,நெருங்கியவர்களை வேவு பார்ப்பதற்கும் இவ்வாறான ஐடிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றது.
- தம்மை ஒரு காதல்மன்னனாகவோ/கனவுகன்னியாகவோ காட்டுவதற்காக தமது உண்மையான ஐடியில் பேக்ஐடியில் வந்து போஸ்ட்/கொமென்ட்களை போஸ்ட் பண்ணுகின்றவர்கள்.
இவ்வாறான் பேக்ஐடிகள்
பலவகைகளில் இருக்கின்றன.
- குறிப்பிட்ட ஐடிக்குரிய உண்மையான ஆள் யார் என்று அவரின் நெருங்கிய நண்பர்கள் வட்டத்துக்கு மட்டும் தெரியும்.
- ஆண்/பெண் பேரில் இயங்கும் பெண்கள்/ஆண்கள்
- தனது அடையாளத்தை மறைத்து இன்னொரு ஆணின்/பெண்ணின் பேரில் இயங்கும் ஆண்/பெண்
- பிரபலங்கள் பேரில் இயங்கும் ஐடிகள்.
- திரைப்பட கதாபாத்திரங்கள் பேரில் இயங்கும் ஐடிகள்.
- சட்டத்துக்கு புறம்பான,ஆபாச நோக்கம் கொண்ட ஐடிகள்.
பேஸ்புக்
அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் ஏறத்தாள 10%மானோர் இவ்வாறன
பேக்ஐடிகளே.அத்துடன் ஒவ்வொரு தனிநபரின் பிரன்ட்லிஸ்ட்டில் குறைந்தது 3%மானோர் இவ்வாறன பேக்ஐடி நண்பர்கள் இருப்பார்கள்.
பேக்ஐடியினரை சிலவழிகளில்
இலகுவாக அடையாளம் காணலாம்.
- முக்கியமாக
இவர்களது பெயர்கள் ஒரே மாதிரியா இருக்கும்.
Eg:ராஜா ராஜன்,ஆன் ஆனி,சிலு சிலுக்கு,குமாரி குமார். - புரபைல் பிக்சரை மாற்றவே மாட்டார்கள்.அல்லது மணித்தியாலத்துக்கு ஒருதடவை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
- ஆண் பேரில் இருக்கும் பெண் பேக்ஐடியினர் தமது ஆண் நண்பர்களின் போஸ்ட்’டுக்கு அதிகம் கொமென்ட் பண்ணுவார்கள்.
- பெண் பேரில் இருக்கும் ஆண் பேக்ஐடியினர் தமது பெண் நண்பர்களின் போஸ்ட்’டுக்கு அதிகம் கொமென்ட் பண்ணுவார்கள்.
- அளவுக்கு அதிகமாக மச்சான்,செல்லம்,என்னடா,என்னடி,என்ன’பா என்று யூஸ் பண்ணுவார்கள்.

No comments:
Post a Comment