பேஸ்புக்கும் பெண்களும்
மறுபடியும் பேஸ்புக் பற்றிய ஒரு பதிவு.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் என்பது போல இன்று பெண்கள் பேஸ்புக்கில் ஒருசிலரால் மிகவும் பாதிக்கபடுகின்றார்கள்.இதனை எவ்வாறு தவிர்ப்பது என்று யோசித்தபோது இந்த பதிவு உருவானது.
- ஒருபோதும் உங்களின் படங்கள் பேஸ்புக்கில் அப்லோட் பண்ணாதீர்கள்.உங்களின் புகைப்படத்தை எடுத்து தவறாக பயன்படுத்துவதையே முழுநேர தொழிலாக கொண்ட பலர் இருக்கின்றார்கள்.
- தனிப்பட்ட விருப்பு,வெறுப்புகளை போஸ்ட் செய்யாதீர்கள்.
- உங்களது வீட்டுமுகவரி,தொலைபேசி இலக்கம் என்பனவற்றை பப்ளிஷ் பண்ணவேண்டாம்.சில சந்தர்ப்பங்களில் பேஸ்புக்கின் சில செட்டிங்கால் நண்பர்கள் இல்லாதவர்கள் கூட உங்கள் இன்போ’வை பார்க்க முடியும்
- நண்பர்கள் உங்களை டக் செய்வதை தவிர்த்து விடுங்கள்.அப்டி டக் செய்யும் போது உங்களின் நண்பர்கள் இல்லாதவர்கள் கூட உங்களை பற்றி அறிந்து கொண்டுவிடுவார்கள்.
- உங்களுக்கு தனிப்பட்டரீதியில் தெரிந்தவர்களை மட்டும் பிரண்டாக அட் பண்ணுங்கள்.அதிக பிரன்ட்லிஸ்ட் வேண்டும் என்பதற்காக எல்லோரையும் இணைக்காதீர்கள்.
- தொடர்ச்சியாக ஒரே பாஸ்வேர்ட்’டை யூஸ் பண்ணவேண்டாம்.பிறந்ததினம்,பெட்நேம்,உறவினர் பெயர்,மொபைல் நம்பரை எக்காரணம் கொண்டும் பாஸ்வேர்டாக யூஸ் பண்ணவேண்டாம்.
- பலபெண்கள் தங்களின் பாஸ்வேர்டை தங்கள் நண்பர்களிடையே பரிமாறி கொள்வார்கள்.இது மிகவும் தவிர்க்கப்படவேண்டும்.
- நண்பர்கள் உங்களை டக் செய்வதை தவிர்த்து விடுங்கள்.அப்டி டக் செய்யும் போது உங்களின் நண்பர்கள் இல்லாதவர்கள் கூட உங்களை பற்றி அறிந்து கொண்டுவிடுவார்கள்.
- நண்பர்களின் போஸ்ட்’டுக்கு கொமென்ட் பண்ணும்போது கவனமாக இருங்கள்.ஏனெனில் அங்கும் உங்கள் நண்பர்கள் இல்லாதவர்கள் இருப்பார்கள்.
- தவறான ஸ்டேடஸ் போடும் நண்பர்களை உடனடியாக நீக்கிவிடுங்கள். உங்களை தொடர்ந்து தொல்லை செய்தால் உடனடியாக ரிப்போர்ட் பண்ணிவிடுங்கள்
- ஒருபோதும் குரூப் சட்,வீடியோ சட் செய்யாதீர்கள்.
பேஸ்புக் ஒரு
சிறப்பான உறவுப்பாலம்.அதனை நாங்கள் உணர்ந்து செயல்பட்டால் எமக்கு அது நன்மையையே
தரும்.

No comments:
Post a Comment